தேவன் ஒருவனே

கர்த்தரும் தேவனுமாகிய அல்லாஹ் ஒருவனே!

(பைபிள் போதிக்கும் ஏகத்துவம்)

ஏசுவை தேவ குமாரான கருத்த சகோதர, சகோதரிகளே உங்கள் எண்ணங்கள் தவறானவையாக இருக்கின்றன இதை நாம் கூறவில்லை மாறாக பைபிள் கூறுகிறது. வாருங்கள் உங்கள் தேவனு வார்த்தைகளை கேட்போம்!

நானே கர்த்தர், வேறொருவரில்லை; என்னைத்தவிர தேவன் இல்லை. (ஏசாயா 45:5)

இந்த வசனத்தை சற்று உற்று நோக்குங்கள்! இங்கு கர்த்தராகிய தேவன் (அல்லாஹ்) தன்னைப் பற்றி கூறுகிறார். அதாவது இந்த சர்வலோகத்தை சிருஷ்டித்து அதை பரிபாலித்து வரக்கூடிய இறைவன் தாம் தான் என்றும் கூறுகிறார். மேலும் என்னைத் தவிர தேவன் இல்லை என்று அவரே மெய்ப்ட கூறுகிறார் இதன் மூலம் தேவன் தனக்கு குமாரனை ஏற்படுத்தவில்லை என்பது ஊர்ஜிதமாகிறது.

சிந்தித்துப்பாருங்கள் தேவன் என்பவன்தான் படைக்க, காக்க, அழிக்க ஆற்றல் பெற்றிருப்பான் எனவே ஏசு என்ற தீர்க்க தரிசியை நீங்கள் தேவ குமாரனாக கருதினால் அவர் தேவனளவுக்கு இணையாக கருதப்படுவரல்லவா? அப்படி கருதுவது அந்த தேவனுடைய வார்த்தைகளுக்கு விரோதமான தில்லையா?

தேவன் தன்னுடைய மகிமையை பற்றி குறிப்பிடும் போது என்னைத்தவிர தேவன் இல்லை என்கிறார் ஆனால் கிருத்தவர் களாகிய நீங்களோ ஏசுவை தேவகுமாரன் என்று கூறி தேவனளவுக்கு உயர்த்தி தேவனுக்கு இணையாக ஆக்குகிறீர்கள்! இந்த செய்கையின் மூலம் கிருத்தவர்களாகிய நீ்ங்கள் தேவனுடைய வார்த்தைகளை குழி தோண்டி புதைக்கிறீர்களே! இது நியாயமா? சிந்திக்கமாட்டீர்களா?

தேவன் (அல்லாஹ்) மட்டும்தான் ரட்சிச்க ஆற்றல் பெற்றவர்

தேவன் தனக்கு மைந்தனை ஏற்படுத்திக்கொண்டான் என்று அபாண்டமாக பொய்யை இட்டுக்கட்டுகிறீர்களே நீ்ங்கள் கீழ்கண்ட இந்த வசனத்தை என்றைக்காவது உணர்ந்ததுண்டா?

உன் சிருஷ்டிகரே உன் நாயகர்; சேனைகளின் கர்த்தர் என்பது அவருடைய நாமம்; இஸ்ரவேலின் பரிசுத்தர் உன் மீட்பர், அவர் சர்வபூமியின் தேவன் என்னப்படுவார். (ஏசாயா 54:5)

பூமியின் எல்லையெங்குமுள்ளவர்களே, என்னை நோக்கிப்பாருங்கள்; அப்பொழுது இரட்சிக்கப்படுவீர்கள்; நானே தேவன், வேறொருவரும் இல்லை. (ஏசாயா 45:22)

இங்கு தேவனாகிய அல்லாஹ் தான் மட்டும்தான் மனிதர்களை இரட்சிப்பதாக சூளுரைக்கிறான் ஆனால் நீங்களோ இந்த தேவனுடைய வார்த்தைகளை புறம்தள்ளிவிட்டு ஏசு ரட்சிப்பார் என்று கூறுகிறீர்களே இது தேவனுக்கு செய்யக்கூடிய தேவ துரோகமில்லையா! மீண்டும் நினைத்துப்பாருங்கள் நானே தேவன், வேறொருவரும் இல்லை என்று தேவனாகிய அல்லாஹ் கூறுகிறான்! மேலும் கீழ்கண்டவாறும் தேவன் கூறுகிறான்

முந்திப் பூர்வகாலத்தில் நடந்தவைகளை நினையுங்கள்; நானே தேவன், வேறொருவரும் இல்லை; நானே தேவன் எனக்குச் சமானமில்லை. (ஏசாயா 46:9)

இங்கு தேவன் தனக்க சமமானவன் யாருமில்லை என்று தெளிவுபட கூறுகிறான் ஆனால் நீ்ங்களோ ஏசுவை தேவ குமாரன் என்று கூறி தேவ வார்த்தைகளை உதாசீனப்படுத்துகிறீர்கள்! தயவு செய்து ஏசுவை தேவகுமாரனாக கருதாதீர்கள் மாறாக அவரை தேவனுடைய உண்மையான ஊழியானாக தீர்க்கதரிசியாக கருதுங்கள்!

மேலும் தேவனாகிய அல்லாஹ் கோபக்காரனாக இருக்கிற படியால் ஏசு என்ற தீர்க்கதரிசியை தேவனளவுக்கு உயர்த்தி அவரை தேவனுக்கு இணையாக்கி பாவாத்தை சம்பாதிக்காதீர்கள் இதோ உங்கள் தேவன் கீழ்கண்டவாறு எச்சரிக்கிறான்!

கர்த்தரோ மெய்யான தெய்வம்; அவர் ஜீவனுள்ள தேவன், நித்திய ராஜா; அவருடைய கோபத்தினால் பூமி அதிரும்; அவருடைய உக்கிரத்தை ஜாதிகள் சகிக்கமாட்டார்கள். (எரேமியா 10:10)

மேலும் தேவனாகிய அல்லாஹ் தன்னை மெய்யான தெய்வனம் என்றும் ஜீவனுள்ள தேவன் என்றும் நித்திய ராஜா என்றும் கூறுகிறான் ஆகவே என்றைக்கோ மறிக்கப் போகும் ஏசு என்ற தீர்க்கதரிசி எவ்வாறு தேவனுடைய குமாரர் ஆவார். தேவனுடைய குமாரர் என்று கூறுவதாக இருந்தால் அவர் தேவனைப் போன்று நித்திய குமாரராக இருந்திருக்க வேண்டுமே ஆனால் அவரோ என்றைக்கோ ஒருநாள் மரணிப்பவராக இருக்கிறாரே அவர் எவ்வாறு தேவ குமாரன் ஆவார்.

தேவனுக்கு குழந்தை தேவையில்லை குர்ஆன் ஆதாரம்

(நபியே!) நீர் கூறுவீராக: அல்லாஹ் அவன் ஒருவனே. அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன். அவன் (எவரையும்) பெறவுமில்லை; (எவராலும்) பெறப்படவுமில்லை. அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை.(ஸூரத்துல் இஃக்லாஸ்(ஏகத்துவம்) – அல்குர்ஆன்)

ஏசு என்ற தீர்க்கதரிசி தேவனுடைய குமாரர் இல்லை என்ற ஆதாரங்களை பைபிள் மற்றும் குர்ஆன் வசனங்கள் மூலமாக நிறுபித்துவிட்டோம் இனி உங்களில் யாராவது ஏசுவை தேவகுமாரன் என்று கூறினால் அதற்கு அந்த தேவனாகிய அல்லாஹ்வே மறுமை நாளில் உங்களுக்கு பதிலளிப்பான்!

(எங்கள் இறைவா! இதோ உன்னுடைய அடிமையாகிய நாம் உண்மையை உறைத்துவிட்டோம்! இதற்கு நீயே சாட்சி! மறுமையில் எங்களை குற்றம் பிடிக்காதிருப்பாயாக!)

குறிப்பு

இந்த செய்தியை சகோதரர் நேசகுமாருக்கும், உமர் என்ற புனைப்பெயர் கொண்ட கிருத்தவ சகோதரருக்கும் மற்றும் கேடுகெட்டத்தனமாக இஸ்லாத்தை விமர்சிக்கும் உங்கள் அனைத்து சகோதர, சகோதரிகளுக்கும் அறிவித்து விடுங்கள்! அவர்களுக்கும் இஸ்லாத்தின் அழைப்பை இங்கிருந்தே விடுகிறோம்! இதே தேவனாகிய அல்லாஹ்வின் அழைப்பை ஏற்றுக்கொள்ளுங்கள்!

இன்னும் இஸ்லாம் அல்லாத (வேறு) மார்க்கத்தை எவரேனும் விரும்பினால் (அது) ஒருபோதும் அவரிடமிருந்து ஒப்புக் கொள்ளப்பட மாட்டாது; மேலும் அ(த்தகைய)வர் மறுமை நாளில் நஷ்டமடைந்தோரில் தான் இருப்பார். (அல்குர்ஆன் 3:85)

Leave a comment