ஏசு தாவீது குமாரர்

ஏசு தாவீதின் குமாரர்தான்!

குறிப்பு

தாவீதின் குமாரர் என்று இங்கு கூறப்பட்டுள்ளதால் நபி தாவுத் (அலை) அவர்கள்தான் ஏசுவின் தகப்பனாரா என்று கருதக்கூடாது மாறாக தாவீது (தாவுத்) என்ற தீர்க்கதரிசியின் வழிவழியாக வந்தவர் என்று கருதுங்கள்! (ஏசு என்கிற நபி ஈஸா (அலை) அவர்கள் தந்தையின்றி பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்

ஏசு தாவீதின் குமாரர்தான் என்று அக்காலத்து மக்கள் கருதினார்கள் அதற்கான ஆதாரங்கள் இதோ உங்கள் முன் சமர்ப்பிக்கின்றோம்! மத்தேயு எழுதிய சுவிசேஷம் 6

 

27 இயேசு அவ்விடத்தை விட்டுப் புறப்பட்டதும் இரு குருடர்கள் அவரைத் தொடர்ந்தார்கள். அக் குருடர்கள் உரத்த குரலில், “தாவீதின் குமாரனே, எங்களுக்குக் கருணை காட்டும்” என்று சொன் னார்கள்.

 

28 இயேசு வீட்டிற்குள் சென்றார். குருடர்கள் இருவரும் அவருடன் வீட்டிற்குள் நுழைந்தனர். இயேசு அவர்களைப் பார்த்து, “நீங்கள் பார்வை பெறுமாறு செய்ய என்னால் முடியுமென்று விசுவாசிக்கிறீர்களா?” என்று கேட்டார். அதற்குக் குருடர்கள் “ஆம், போதகரே, நாங்கள் விசுவாசிக்கிறோம்” என்று பதிலளித்தனர்.

 

29 பிறகு இயேசு அவர்களது கண்களைத் தொட்டு, நீங்கள் பார்வை பெறுமாறு செய்ய என்னால் முடியுமென்று நம்புகிறீர்கள். எனவே அது நடக்கும்” என்று சொன்னார்.

 

30 உடனே அவர்களால் பார்க்க முடிந்தது. பின் அவர், “இதைக் குறித்து யாரிடமும் கூறாதீர்கள்” என்று கண்டிப்புடன் சொல்லி அனுப்பினார்.

 

31 ஆனால் அவர்கள் அங்கிருந்து சென்று இயேசுவைக் குறித்த செய்திகளை அப்பிரதேசமெங்கும் பரப்பினார்கள்.

 

32 அவர்கள் இருவரும் புறப்பட்டுச்சென்ற பின், சிலர் வேறொரு மனிதனை இயேசுவிடம் அழைத்து வந்தார்கள். இம்மனிதனைப் பிசாசு பிடித்திருந்ததினால் அவனால் பேச இயலவில்லை.

 

33 இயேசு அம்மனிதனிடமிருந்த பிசாசை விரட்டினார். பிறகு ஊமையான அம்மனிதனால் பேச முடிந்தது. அதனால் வியப்படைந்த மக்கள், “இஸ்ரவேலில் நாங்கள் ஒருபோதும் இப்படிப்பட்ட ஒன்றைக் கண்டதில்லை” என்று கூறினார்கள்.

 

34 ஆனால் பரிசேயர்கள், “பிசாசுகளை விரட்டுகிற வல்லமையை இயேசுவிற்குக் கொடுத்தது பிசாசுகளின் தலைவனே” என்று சொன்னார்கள்.

தேவனுக்கு குழந்தை தேவையில்லை குர்ஆன் ஆதாரம்

(நபியே?!) நீர் கூறுவீராக: அல்லாஹ் அவன் ஒருவனே. அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன். அவன் (எவரையும்) பெறவுமில்லை; (எவராலும்) பெறப்படவுமில்லை. அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை. (ஸூரத்துல் இஃக்லாஸ்(ஏகத்துவம்) – அல்குர்ஆன்)

ஏசுவை தாவீதின் குமாரர் என்று மக்கள் அழைத்தற்கான ஆதாரத்தை உங்கள் மன் சமர்ப்பித்துவிட்டோம் இனி உங்களில் யாராவது ஏசுவை தேவகுமாரன் என்று கூறினால் அதற்கு அந்த தேவனாகிய அல்லாஹ்வே மறுமை நாளில் உங்களுக்கு பதிலளிப்பான்!

(எங்கள் இறைவா! இதோ உன்னுடைய அடிமையாகிய நாம் உண்மையை உறைத்துவிட்டோம்! இதற்கு நீயே சாட்சி! மறுமையில் எங்களை குற்றம் பிடிக்காதிருப்பாயாக!)

Leave a comment