கோபமும் ஏசுவும்

ஏசு கடுமையான கோபம் கொண்டார்!

ஏசு என்ற தூதர் ஒரு பக்கவாத வியாதிக்காரனை குணப்படுத்திய நேரத்தில் அங்கு குழுமியிருந்த மக்கள் ஏசுவை நோக்கி இவர் தேவனைப் போலவே பேசுகிறான் என்று வர்ணித்தனர் இதை கேள்விப்பட்ட ஏசு கடுமையான சினம் கொண்டார் அவ்வாறு பேசியவர்களுக்கு எச்சரிக்கைகள் விடுத்தார் இதற்கான ஆதாரம் இதோ

(1) இயேசு ஒரு படகில் ஏரியைக் கடந்து மீண்டும் தம் சொந்த நகருக்குத் திரும்பினார். (மத்தேயு எழுதிய சுவிசேஷம் 9)

(2) பக்கவாத வியாதியினால் பாதிக்கப்பட்ட ஒருவனைச் சிலர் இயேசுவிடம் அழைத்து வந்தனர். அவன் படுக்கையில் படுத்திருந்தான். அம்மக்கள் மிகுந்த நம்பிக்கையோடு வந்திருந்ததை இயேசு கண்டார். எனவே இயேசு அந்த வியாதிக்காரனிடம், “வாலிபனே, மகிழ்ச்சியாயிரு. உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன” என்றார். (மத்தேயு எழுதிய சுவிசேஷம் 9)

(3) இதைக் கேட்ட சில வேதப்போதகர்கள். “இந்த மனிதன் (இயேசு) தேவனைப் போலவே பேசுகிறான். இது தேவனை நிந்திக்கும் செயல்” என்று தங்களுக்குள்ளே பேசிக்கொண்டார்கள். (மத்தேயு எழுதிய சுவிசேஷம் 9)

(4) அவர்கள் இவ்வாறு எண்ணியதை இயேசு அறிந்தார். எனவே இயேசு, “நீங்கள் ஏன் தீய எண்ணங்களைச் சிந்திக்கின்றீர்கள்? (மத்தேயு எழுதிய சுவிசேஷம் 9)

மக்கள் இங்கு ஏசுவை மனிதன் என்றுதான் கருதினர் பிறகு இவர் தேவனைப் போன்ற பேசுகிறான் என்று கூறி ஏசு தேவனை நிந்திக்கிறார் என்று கூறி மக்களை திசை திருப்ப முற்படு கின்றனர். இதை கேள்விப்பட்ட ஏசு அந்த சூட்சமக்காரர்களின் மீது கடுங்கோபம் கொள்கிறார் பின்னர் தாம் எவ்வாறு வியாதியஸ் தர்களை குணப்படுத்துகிறேன் என்பதை பின்வருமாறு விவரிக்கிறார்.

(5) பக்கவாத வியாதிக்காரனிடம் ‘உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன என்று கூறுவது எளிதா? அல்லது எழுந்து நட, என்று கூறுவது எளிதா? (மத்தேயு எழுதிய சுவிசேஷம் 9)

மேற்கண்ட வசனத்தை பார்க்கும் போது ஏசு என்ற தூதர் வியாதி யஸ்தர்களை அவர்களது மன நிலையையின் அடிப்படையில் ஆறுதல் கூறுகிறார் அதனால் அவர்களுக்க மனதளவில் சிறு தெம்பு ஏற்படுகிறது பின்னர் அவர் தேவனுடைய ஆசிர்வாதத்தின் அடிப்படையில் சில கட்டளைகளையிடுகிறார்.

(6) ஆனால் மனித குமாரனுக்கு பூமியில் பாவங்களை மன்னிக்கும் வல்லமை இருப்பதை நான் உங்களுக்கு நிரூபிப்பேன்” என்று சொன்னார். பிறகு அந்த வியாதிக்காரனிடம் இயேசு “எழுந்திரு. உன் படுக்கையை எடுத்துக் கொண்டு வீட்டிற்குச் செல்!” என்று கூறினார். (மத்தேயு எழுதிய சுவிசேஷம் 9)

மேற்கண்ட வசனத்தை படித்தவுடன் பாவங்களை மன்னிக்கும் வல்லமையை ஏசு கூறுகிறார் எனவே அவர் தேவனுடைய குமாரர் என்று கருதக்கூடாது மாறாக ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்கு செய்யும் துரோகம் பாவமாக மாறிவிடுகிறது எனவே பாதிக்கப்பட்ட சம்பந்தப்பட்ட நபர் மன்னிக்காதவரை இறைவன் மன்னிப்பதில்லை என்று இஸ்லாம் கூறுகிறது இந்த இஸ்லாமிய கோட்பாடு ஏசுவின் வார்த்தைகளால் நிறுபனமாகிவிட்டது! எல்லாப் புகழும் தேவனுக்கே (அல்லாஹ்வுக்கே)

(7) அம்மனிதன் எழுந்து வீட்டுக்குச் சென்றான். (மத்தேயு எழுதிய சுவிசேஷம் 9)

(8) இதைக்கண்ட மக்கள் வியப்புற்றனர். இத்தகைய வல்லமையை மனிதனுக்கு அளித்ததற்காக அவர்கள் தேவனைப் புகழ்ந்தார்கள். (மத்தேயு எழுதிய சுவிசேஷம் 9)

மேற்கண்ட இந்த வசனம மிக அற்புதமாக ஏசுவின் மீதுள்ள கறையை அகற்றுகிறது அதாவது ஏசு நிகழ்த்திய அற்புதங்கள் தேவனுடைய வல்லமையால்தான் நிகழ்த்தப்பட்டன என்பதை ஏசுவின் காலத்து மக்கள் தெளிவாக அறிந்துவைத்திருந்தனர் எனவேதான் இந்த அற்புதங்களை கண்டபின்னர் அந்த மக்கள் இத்தகைய வல்லமையை மனிதனுக்கு அளித்ததற்காக தேவனைப் புகழ்ந்தார்கள். எல்லாப் புகழும் தேவனுக்கே (அல்லாஹ்வுக்கே)

Leave a comment