ஏசுவின் சீடர்கள்

ஏசு தனது சீடர்களுக்கு கற்றுத்தந்த மனோதத்துவ மருத்துவம்!

மனோதத்துவ கலையை அறிந்திருந்து ஏசு தமக்கு கீழ்படிந்த 12-சீடர்களுக்கும் இந்த கலையை நன்முறையில் போதித்து மக்களை குணப்படுத்த வலியுறுத்தியிருக்கிறார் என்ற செய்தியும் பைபிளில் அடங்கியுள்ளது! இதனூடே அந்த சீடர்கள் உலகை படைத்த இறைவனது (அதாவது பரமண்டல பிதாவின்) வல்லமைமிக்க ஆட்சியை மக்களிடம் எத்திவைக்க ஏசுவினால் அனுப்பப்பட்டனர்.

மனோ தைரியமூட்டும் ஏசுவின் அற்புத கலையை கற்றுக்கொண்ட ஏசுவின் சீடர்களை கிருத்தவ சகோதரர்கள் கடவுளின் பிள்ளைகளாக கூறுவதில்லை மாறாக மனோ தைரியம் ஊட்டி குணப்படுத்திய ஏசுவை தேவனின் பிள்ளை என்று வர்ணிக்கின்றனர் இது முறையா? மேலும் மக்களிடம் ஏசுநாதர் தன்னை இறைவனின் மகன் என்று கூறுங்கள் என்று ஒருபோதும் கூறவில்லை மக்கள்தான் அவரை அவ்வாறாக புகழ ஆரம்பித்தனர். இதைத்தான் கீழ்கண்ட மத்தேயு எழுதிய சுவிசேஷம்  10 தெளிவாக விளக்குகிறது!

 

ஏசு அப்போஸ்தலர்களை அனுப்புதல்

மத்தேயு எழுதிய சுவிசேஷம் 10

(1) இயேசு தமது பன்னிரண்டு சீஷர்களையும் ஒன்றாய் அழைத்தார். தீய ஆவிகளை மேற் கொள்ளும் வல்லமையை இயேசு அவர்களுக்கு வழங்கினார். எல்லா விதமான நோய் களையும் பிணிகளையும் குணப்படுத்தும் வல்லமை யையும் இயேசு அவர்களுக்கு வழங்கினார்.

(2) அந்தப் பன்னிரண்டு அப்போஸ்தலர்களின் பெயர்கள் வருமாறு: சீமோன் (மற்றொரு பெயர் பேதுரு.) மற்றும் அவரது சகோதரன் அந்திரேயா, செபதேயுவின் மகன் யாக்கோபு மற்றும் அவரது சகோதரன் யோவான்

(3) பிலிப்பு மற்றும் பார்த்தலோமியு, தோமா மற்றும் வரி வசூலிக்கும் அதிகாரியான மத்தேயு, அல்பேயுவின் மகன் யாக்கோபு, ததேயு,

(4) சீலோத்தியனாகிய சீமோன் மற்றும் யூதா ஸ்காரியோத்து. ………………..  யூதாஸ் ஆவான்.

(5) இயேசு இந்தத் தமது பன்னிரண்டு சீஷர்களுக்கும் சில கட்டளைகளைப் பிறப்பித்தார். பின் அவர்களை மக்களுக்குப் பரலோக இராஜ்யத்தைப்பற்றிக் கூறுவதற்கு அனுப்பினார். இயேசு அவர்களிடம், “யூதர்களல்லாதவர்களிடம் செல்லாதீர்கள். மேலும் சமாரிய மக்கள் வசிக்கும் நகரங்களுக்கும் செல்லாதீர்கள்.

 

(6) ஆனால் இஸ்ரவேல் மக்களிடம் (யூதர்களிடம்) செல்லுங்கள். அவர்கள் காணாமல் போன ஆடுகளைப் போன்றவர்கள்.

(7) நீங்கள் சென்று, ‘பரலோக இராஜ்யம் விரைவில் வர இருக்கிறது’ என்று போதியுங்கள்.

(8) நோயுற்றவர்களைக் குணமாக்குங்கள். இறந்தவர்களுக்கு மீண்டும் உயிர் கொடுங்கள். தொழு நோயாளிகளைக் குணப்படுத் துங்கள். பிசாசு பிடித்தவர்களிடமிருந்து பிசாசுகளை விரட்டுங்கள். இவ்வல்லமைகளை உங்களுக்குத் தாராளமாய் வழங்குகிறேன். எனவே, மற்றவர்களுக்குத் தாராளமாய் உதவுங்கள்.

(9) உங்களுடன் தங்கம், வெள்ளி அல்லது செம்பு நாணயங்களை எடுத்துச் செல்லாதீர்கள்.

(10) பைகளைக் கொண்டு போகாதீர்கள். உங்கள் பயணத்திற்கு நீங்கள் அணிந்திருக்கும் உடையையும் காலணிகளையும் மட்டுமே எடுத்துச் செல்லுங்கள். ஊன்றுகோலை எடுத்துச் செல்லாதீர்கள். பணியாளனுக்குத் தேவையானவை கொடுக்கப் படவேண்டும்.

(10) நீங்கள் ஒரு நகரத்திலோ ஊரிலோ நுழையும்பொழுது, தகுதிவாய்ந்த மனிதரைக் கண்டு நீங்கள் அவ்விடத்தை விட்டு விலகிச் செல்லும்வரை அவருடன் தங்கி இருங்கள்.

 

குறிப்பு

இங்கு பிசாசு என்று கூறப்பட்டுள்ளது! பேய், பிசாசு, காத்து கருப்பு என்று எண்ணாதீர்கள் மாறாக மனோவியாதி என்று கருதுங்கள்

Leave a comment