பைபிள் இறைவேதம் அல்ல!

கேள்வி

பைபிளில் இயேசு சிலுவையில் அறையப்பட்டதை ஏற்கலாமா?

111.jpg

பதில்:

தீர்க்கதரிசனமானது ஒருகாலத்திலும் மனுஷருடைய சித்தத்தினாலே உண்டாகவில்லை; தேவனுடைய பரிசுத்த மனுஷர்கள் பரிசுத்த ஆவியினாலே ஏவப்பட்டுப் பேசினார்கள். (பைபிள் II பேதுரு 1:21)

இறைவனிடமிருந்து அனுப்பப்பட் தூதர்கள் இறைச் செய்தியை தன் சமுதாயத்தவர்களுக்கு அறிவிப்பார்கள் அவ்வாறு அறிவிக்கக்கூடிய செய்திகள் இறைவனின் வார்த்தகளாக இருக்கும் அவ் வார்த்தைகளில் அர்த்தமும் இருக்கும் ஆனால் அப்படிப்பட்ட நிலையில் இறைவனின் வார்த்தைகளை போதிக்கும் ஒருவர் இறைவனால் அங்கீகரிக்கப்பட்ட இறைவனின் தூதுவர்களாக இருப்பார்கள் அவர்களுக்கு உதாரணமாக ஒரு சில இறைத்தூதர்களை கூறலாம்!

  1. ஆபிரகாம் –     இப்ராஹிம் (அலை)
  2. நோஹா      –     நூஹு (அலை)
  3. மோசஸ் –     மூஸா (அலை)
  4. தாவீது           –     தாவுத் (அலை)
  5. சாலமோன் –     சுலைமான் (அலை)
  6. இயேசு –     ஈஸா (அலை)
  7. அஹமது –     முஹம்மது (ஸல்)

இறைத்தூதர்கள் அனைவரும் இறைச் செய்திகளை கொண்டு வந்தார்கள் அவர்களில் அதிகமாக வேதங்களில் பெயர் குறிப்பிடப்பட்ட மேற்கண்ட நபிமார்கள் எனும் இறைத்தூதர்கள் தங்கள் சமுதாயத்த வர்களுக்கு அறிவித்ததே இறைச் செய்தி மேலும் அந்த இறைச் செய்திகளின் தொகுப்பே இறை வேதமாகும்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் பைபிள் இறை வேதமாகுமா? என்றால் அது இறை வேதம் என்பதற்கு எந்த முகாந்திரமும் இல்லை!

இறைவேதம் என்றால் என்ன?

ஒரு சமுதாயத்திற்கு நன்மையை நாட எண்ணினால் அச் சமுதாயத் தவர்களுக்கு இறைவன் பல்வேறு சோதனைகளை கொடுத்து சோதிப்பான் அவ்வாறு சோதிப்பதற்கு அவருடன் இறைத்தூதர் ஒருவர் வரவேண்டும். இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஒரு இறைத்தூதர் தன் இறைவனிடமிருந்து பெறக்கூடிய தீர்க்க தரிசனங்களை தன் சமுதாயத்தவர்களுக்கு போதிப்பார் அப்படி போதிக்கம் செய்திகள் அடங்கிய ஒரு தொகுப்பே இறைவேதமாகும். இறை வேதம் என்பது இறைவனின் தூதர் மரணிப்பதற்கு முன் முழுமையடைந்திருக்க வேண்டும் அவ்வாறு முழுமையடைந்த வேதங்களே இறை வேதங்களாகும்.

குர்ஆன் இறை வேதம் என்பதற்கு மிகச் சிறந்த உதாரணம்!

அருள்மறை குர்ஆன் இறை வேதம் என்பதற்கு மிகச் சிறந்த உதாரணமாகும் அதற்கான காரணங்கள் கீழே விளக்கப்பட்டுள்ளது

  • இறைத்தூதர் செய்தியை மக்களிடம் அறிவிக்க வேண்டும்!
  • இறைச் செய்தியை இறைத்தூதர் முன்னிலையில் பாதுகாக்கப்பட வேண்டும்!
  • இறைச் செய்திகள் அனைத்தும் முழுவதுமாக உள்ளத்தில் நிறுத்தி அதை மனனம் செய்திருக்க வேண்டும்!
  • இறைச் செய்திகள் இறைத்தூதரின் அறிவிப்பின் படி அச்சு பிசகமாமல் இருக்க வேண்டும்!

ஆக முஸ்லிம்களாகிய நாம் படிக்கும், சிந்திக்கும், பின்பற்றும் அருள்மறை குர்ஆன் இந்த அத்தனை அம்சங்களையும் பெற்றிருக்கிறது. ஆக ஒரு இறைவேதத்தில் அந்த சமுதாயத்தின் தீர்க்கதரிசி தாம் கூறிய அனைத்து செய்திகளும் பலமுறை உள்ளத்தில் நிறுத்தி தீர்க்கதரிசி சொல்லாத வார்த்தைகளை அதற்குள் இணைக்கக் கூடாது!

ஒருவேளை இறைவேதத்தில் தீர்க்கதரிசி கூறாத ஒரே ஒரு சொல் அல்லது ஒரே ஒரு வசனம் கண்டறியப்பட்டாலும் அந்த இறைவேதம் சாதாரணமான புத்தகமாகவே கருதப்படும் இப்படிப்பட்ட நிலையில் இறைவேதம் என்பதற்கு அருள்மறை குர்ஆனைப் போன்று எந்த ஒரு வேதமும் இன்று நம்மிடையே இல்லை!

பைபிள் இறைவேதமா?

பைபிளில் இயேசு கூறிய வார்த்தைகளும் உள்ளது அதுபோன்று இயேசு கூறாத வார்த்தைகளும் உள்ளது அது எவ்வாறு இறை வேதமாகும்? குழப்பமாக உள்ளதா? இதைப் பற்றி தெளிவாக உணர்த்துகிறோம்!

இயேசு உயிருடன் இருந்த காலத்தில் அவர் கூறிய செய்திகளை அவருடைய சீடர்களால் தொகுக்கப்பட்டு எழுதப்பட்டது பைபிள் என்கிறார்கள் அப்படியானல் இயேசு மரித்த பின்னர் அவர் சொல்லாத வார்த்தைகளை எவ்வாறு பைபிளில் கொண்டு வந்தார்கள்?

இயேசு சிலுவையில் அறையப்பட்ட செய்திகள் அவர் மரித்த பின்னர் நடந்த சம்பவங்கள் மனிதனால் பைபிளில் இடைச் செறுகப்பட்டு உள்ளது! உதாரணமாக கீழ்க்கண்ட வசனங்கள் உங்கள் பார்வைக்கு சமர்பிக்கிறோம்!

இந்த வசனம் இயேசு கூறிய வார்த்தையா?

அவரைச் சிலுவையில் அறைந்தபின்பு, அவர்கள் சீட்டுப்போட்டு அவருடைய வஸ்திரங்களைப் பங்கிட்டுக்கொண்டார்கள். என் வஸ்திரங்களைத் தங்களுக்குள்ளே பங்கிட்டு, என் உடையின் பேரில் சீட்டுப்போட்டார்கள் என்று தீர்க்கதரிசியால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது. (பைபிள் புதிய ஏற்பாடு மத்தேயு 27:35)

மேற்கண்ட வசனத்தில் இயேசு சிலுவையில் அறையப்பட்ட செய்தியை கூறுகிறது ஆக இயேசு சிலுவையில் அறையப்பட்டது உண்மையானால் அவர் தன் சுய நினைவை இழந்த நிலையில் மரணித்துள்ளார் அப்படிப்பட்ட நிலையில் இந்த வசனம் இயேசுவினால் கூறப்பட்ட வசனம் அல்ல மாறாக அன்றைய மக்களின் வாய் வழி வார்த்தைகளால் இட்டுக்கட்டப்பட்ட செய்தியாகும் இவ்வாறு இட்டுக்கட்டப்பட்ட செய்தி பைபிளில் இடைச் செருகள் செய்யப்பட்டுள்ளதால் பைபிள் அதன் புனிதத்தை இழந்துவிட்டது அது இறைவேதம் என்ற தகுதியை இழந்துவிட்டது!

அப்பொழுது, அவருடைய வலது பக்கத்தில் ஒருவனும் அவருடைய இடது பக்கத்தில் ஒருவனுமாக இரண்டு கள்ளர் அவரோடேகூடச் சிலுவைகளில் அறையப்பட்டார்கள். (பைபிள் புதிய ஏற்பாடு மத்தேயு 27:38 )

மேற்கண்ட வசனத்தில் இயேசு சிலுவையில் அறையப்பட்டதாக கூறப்பட்ட செய்தியில் அவருடைய வலது பக்கத்தில் ஒருவனும் இடது பக்கத்தில் ஒருவனுமனும் இரண்டு கள்ளர்கள் அவரோடு சிலுவையில் அறையப்பட்டதாக அறிவிப்பு வருகிறது.

சிந்திக்க வேண்டியது

இயேசு சுயநினைவை இழந்த பின்பு அவர் அறிவிக்காத இந்த செய்தி இறைச் செய்தியாக கருத இயலுமா? அவ்வாறு இது பைபிளின் புனிதமான வசனம் என்ற கருதினால் இந்த வசனத்தை எழுதியவர் இறைத்தூதரா? இச் செய்தி இயேசுவினால் கூறப்படாத நிலையில் இட்டுக்கட்டப்பட்ட செய்தியாக திகழ்கிறது.

 அவர் அடைந்த ஆக்கினையின் முகாந்தரத்தைக் காண்பிக்கும் பொருட்டு, யூதருடைய ராஜா என்று எழுதி, சிலுவையின் மேல் கட்டினார்கள். (பைபிள் புதிய ஏற்பாடு மாற்கு 15:26)

இயேசு சிலுவையில் அறையப்பட்ட பின்பு இடம் பெறும் செய்தியை பைபிள் வசனமாக எழுதியுள்ளார்கள் இவர்கள் கூற்றுப்படி இது இறைவசனம் என்றால் அதை இயேசு கூறினாரா? இல்லவே இல்லை மாறாக மனிதர்கள் சுயமாக கற்பனை செய்து எழுதிக் கொண்டதாகவே இந்த வசனம் திகழ்கிறது.

அவன் அவர்களை நோக்கி: பயப்படாதிருங்கள்சிலுவையில் அறையப்பட்ட நசரேயனாகிய இயேசுவைத் தேடுகிறீர்கள்; அவர் உயிர்த்தெழுந்தார், அவர் இங்கேயில்லை; இதோ, அவரை வைத்த இடம். (பைபிள் புதிய ஏற்பாடு மாற்கு 16:6)

மேற்கண்ட வசனத்தில் இயேசு மரித்து அடக்கம் செய்யப்பட்ட பிறகு மக்கள் அவரை தேடுவதாக அறிவிப்பு வருகிறது இந்த அறிவிப்பை செய்பவர் மனிதர் ஆக சாதாரண மனிதர்களின் அறிவிப்புகளை இறை வசனம் என்று எழுதிக் கொண்டு அதுதான் பைபிள் இறைவேதம் என்று கூறினால் இவர்களை விட உலகில் முட்டாள்கள் யாருமில்லை!

ஆக பைபிளில் என்னற்ற அனேக வசனங்கள் இயேசுவின் வார்த்தைகளாக அல்லாமலும் அவர் சிலுவையில் அறையப்பட்டு சுயநினைவை இழந்து மரணித்த பின்னரும் (இயேசு இஸ்லாத்தின் நம்பிக்கையின் படி சிலுவையில் அறையப்படவில்லை மற்றும் அவர் மரணிக்கவில்லை இன்றளவும் உயிருடன் உள்ளார்) எழுதப்பட்ட மக்களின் சுய வார்த்தைகளே ஆக பைபிள் இறைவேதம் அல்ல என்பதற்கு இந்த சில வசனங்களே போதுமானதாகும்.

அன்புடன்

சிராஜ்அப்துல்லாஹ்

அசத்தியம் அடியோடு வீழ்ந்தது! அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்!

இயேசு தேவனுடைய குமாரன் இல்லை மாறாக தாசன் (இறைவனுடைய அடிமை) என்பது உறுதியாயிற்று – பைபிள் ஆதாரம்!


மத்தேயு அதிகாரம் 12:18

(17) ஏசாயா தீர்க்கதரிசியால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது. அவன் உரைத்ததாவது:

(18) இதோ, நான் தெரிந்துகொண்ட என்னுடைய தாசன், என் ஆத்துமாவுக்குப் பிரியமாயிருக்கிற என்னுடைய நேசன்; என் ஆவியை அவர்மேல் அமரப்பண்ணுவேன், அவர் புறஜாதியாருக்கு நியாயத்தை அறிவிப்பார். (மத்தேயு 12:18)

(19)  வாக்குவாதம் செய்யவுமாட்டார், கூக்குரலிடவுமாட்டார்; அவருடைய சத்தத்தை ஒருவனும் வீதிகளில் கேட்பதுமில்லை.

(20)  அவர் நியாயத்திற்கு ஜெயங்கிடைக்கப் பண்ணுகிறவரைக்கும், நெரிந்தநாணலை முறிக்காமலும், மங்கி எரிகிற திரியை அணைக்காமலும் இருப்பார்.

(21)  அவருடைய நாமத்தின்மேல் புறஜாதியார் நம்பிக்கையா யிருப்பார்கள் என்பதே.

(22)  அப்பொழுது, பிசாசு பிடித்த குருடும் ஊமையுமான ஒருவன் அவரிடத்தில் கொண்டுவரப்பட்டான்; குருடும் ஊமையு மானவன் பேசவுங் காணவுந்தக்கதாக அவனைச் சொஸ்த மாக்கினார்.

(23)  ஜனங்களெல்லாரும் ஆச்சரியப்பட்டு: தாவீதின் குமாரன் இவர்தானோ? என்றார்கள்.

முன்னுரை

அன்புள்ள கிருஸ்தவ மத சகோதர, சகோதரிகளே, மத போதகர்களே, பாதிரியார்களே, கண்ணியஸ்தரிகளே மற்றும் கிருஸ்தவ பொது ஜனங்களே இதோ இதுநாள்வரை நீங்கள் இயேசு என்ற தீர்க்கதரிசியை தேவனுடைய குமாரன் என்று கூறிவந்தீர்கள் இந்த தவறான கொள்கையில் நீங்கள் உறுதியாக இருந்து உங்கள் தேவகுமாரன் கொள்கையை உலகம் முழுவதும் பரப்பி வந்தீர்கள் ஆனால் உங்களுடைய இந்த தேவகுமாரன் என்ற தவறான கொள்கை அடியோடு வீழ்ந்துவிட்டது. ஆம் அதற்கான தகுந்த ஆதாரங்களை நாம் இதோ உங்கள் முன் சமர்ப்பிக்கின்றோம்! முதலில் கீழ்கண்ட குர்ஆன் வசனத்தை மனதில் நிறுத்துங்கள்!

(நபியே!) இன்னும், “சத்தியம் வந்தது; அசத்தியம் அழிந்தது. நிச்சயமாக அசத்தியமானது அழிந்து போவதேயாகும்” என்று கூறுவீராக. (அல்குர்ஆன் 17:81)

அவ்வாறில்லை! நாம் சத்தியத்தை கொண்டு, அசத்தியத்தின் மீது வீசுகிறோம்; அதனால், (சத்தியம் அசத்தியத்தின் சிரசைச்) சிதறடித்துவிடுகிறது; பின்னர் (அசத்தியம்) அழிந்தே போய்விடுகிறது. ஆகவே, நீங்கள் (கற்பனையாக இட்டுக்கட்டி) வர்ணிப்பதெல்லாம் உங்களுக்கு கேடுதான். (அல்குர்ஆன் 21:18)

கிருஸ்தவர்களே தேவகுமாரன் என்ற அசத்தியத்தை உங்கள் கண் முன்னே தகர்த்தெரிகிறோம்!

இயேசு என்ற தீர்க்கதரிசியை இதுநாள் வரை நீங்கள் அனைவரும் தேவகுமாரன் என்றுதான் கூறிவந்தீர்கள் ஆனால் இந்த கொள்கை தவறானது என்று இறுதிவேதமான குர்ஆன் கூறியிருந்தும் நீங்கள் ஏற்கமறுத்தீர்கள் ஆனால் உங்கள் பைபிளில் உள்ள மத்தேயு அதிகாரம் 12ல் இடம்பெறும் 18ம் வசனத்தில் ஏசாயா தீர்க்கதரிசனம் பற்றி குறிப்பு வருகிறது அந்த குறிப்பில் 18ம் வசனத்தில் இதோ இயேசு என்பது தேவனுடைய தாசன்தான் என்பது தெளிவாக கூறப்பட்டுள்ளது சற்றே பொறுமையாக கேளுங்கள்!

இதோ, நான் தெரிந்துகொண்ட என்னுடைய தாசன், என் ஆத்துமாவுக்குப் பிரியமாயிருக்கிற என்னுடைய நேசன்; என் ஆவியை அவர்மேல் அமரப்பண்ணுவேன், அவர் புறஜாதியாருக்கு நியாயத்தை அறிவிப்பார். (மத்தேயு 12:18)

இயேசு தேவனுடைய தாசன் (அடிமை)தான்!

இதோ, நான் தெரிந்துகொண்ட என்னுடைய தாசன்

மத்தேயு எழுதிய சுவிஷேத்தில் உள்ள 12ம் அதிகாரத்தின் 18ம் வசனத்தின் ஆரம்ப பகுதியில் இடம் பெரும் இந்த வாசகத்தில் சேனைகளின் கர்த்தரும், தேவனுமாகிய அல்லாஹ் ஏசாயா என்ற தீர்க்கதரியின் மூலமாக இயேசுவைப் பற்றிய முன்னறிவிப்பு செய்கிறான் அதில் இயேசு என்பவர் வரப்போகிறார் அவரை தேவன் தன்னுடைய தாசனாக தேர்ந்தெடுக்கப்போகிறான் என்ற உண்மை நிறுபணமாகிவிட்டது!

இந்த வசனத்தில் தேவனாகிய அல்லாஹ் தன்னை நான் என்று வர்ணிக்கிறான் பிறகு இயேசு என்ற தீர்க்கதரிசியை தன்னுடைய தாசனாக (தாசன் என்றால் அடிமை) தெரிந்துக்கொண்டதாக (அதாவது தேர்ந்தெடுத்துக் கொண்டதாக) பிரகடனப்படுத்துகிறான். எனவே இயேசு என்பவர் தேவனாகிய அல்லாஹ்வினால் தேர்ந்தெடுக்கப்பட்ட அடிமை என்று 100 சதவீதம் உறுதியாகி விட்டது! இதை இறுதி வேதமாகிய அருள்மறை குர்ஆனும் உண்மைப்படுத்துகிறது! இதோ ஆதாரம்

(ஈஸா) மஸீஹும், (அல்லாஹ்வுக்கு) நெருக்கமான மலக்குகளும் அல்லாஹ்வுக்கு அடிமையாயிருப்பதைக் குறைவாகக் கொள்ள மாட்டார்கள். எவர் அவனுக்கு (அடிமையாய்) வழிபடுதலைக் குறைவாக எண்ணி, கர்வமுங் கொள்கிறார்களோ; அவர்கள் யாவரையும் மறுமையில் தன்னிடம் ஒன்று சேர்ப்பான். (அல்குர்ஆன் 4:172)

இயேசு (எ) ஈஸா நபி அல்லாஹ்வின் அடிமை

பைபிள் மத்தேயு 12:18

இதோ, நான் தெரிந்துகொண்ட என்னுடைய தாசன்

அல்குர்ஆன் 4:172

அல்லாஹ்வுக்கு அடிமையாயிருப்பதைக் குறைவாகக் கொள்ள மாட்டார்கள்.

சுப்ஹானல்லாஹ்! சுப்ஹானல்லாஹ்! இயேசு தேவனுடைய அடிமை என்பதற்கு இதைவிட என்ன ஆதாரம் உங்களுக்கு வேண்டும் என் கிருஸ்தவ தோழர்களே!

இயேசு தேவனுடைய நேசன் (அன்புக்குரியவர்)தான்!

என் ஆத்துமாவுக்குப் பிரியமாயிருக்கிற என்னுடைய நேசன்;

சேனைகளின் கர்த்தரும், தேவனுமாகிய அல்லாஹ் தனது ஆத்துமாவிற்கு பிரியமானவராக, நேசமுள்ளவராக இயேசு என்ற தீர்க்கதரிசியை தேர்ந்தெடுத்துள்ளதாக முன்னறிவிப்பு செய்கிறான்! இதை குர்ஆன் உறுதிபடுத்துகிறது!

அவர் (ஈஸா நம்முடைய) அடியாரே அன்றி வேறில்லை; அவருக்கு நாம் அருட்கொடையைச் சொரிந்து இஸ்ராயீலின் சந்ததியாருக்கு அவரை நல்லுதாரணமாக ஆக்கினோம். (அல்குர்ஆன் 43:59)

அல்லாஹ் சுப்ஹானவதாலா இங்கு இயேசு என்ற தீர்க்கதரிசியைப் பற்றி கூறும்போது அவருக்கு நாம் தன் அருட்கொடையை சொரிந்து என்று கூறுகிறான் அதாவது தந்தையின் துணையின்றி பிறந்த ஈஸா (அலை) அவர்கள் மீது அல்லாஹ் தன் அருளை பொழிந்ததாக வர்ணிக்கிறான்!

இயேசு (எ) ஈஸா நபியின் மீது அல்லாஹ்வின் பாசம்

பைபிள் மத்தேயு 12:18

என் ஆத்துமாவுக்குப் பிரியமாயிருக்கிற என்னுடைய நேசன்;

அல்குர்ஆன் 43:59

அவருக்கு நாம் அருட்கொடையைச் சொரிந்து

சுப்ஹானல்லாஹ்! சுப்ஹானல்லாஹ்!இயேசு இறைத்தூதர்தான் என்பதற்கு இதைவிட என்ன ஆதாரம் உங்களுக்கு வேண்டும் என் கிருஸ்தவ தோழர்களே!

இயேசுவின் மீது பரிசுத்த ஆத்மாவைக் கொண்டு!

சேனைகளின் கர்த்தரும், தேவனுமாகிய அல்லாஹ் தனது தீர்க்கதரிசியான இயேசுவின் மீது பரிசுத்த ஆவியை அமரப்பண்ணுவேன் ஏன்று முன்னறிவிப்பு செய்கிறான்! இதைத்தான் கீழ்கண்ட வசனம் மெய்ப்படுத்துகிறது!

என் ஆவியை அவர்மேல் அமரப்பண்ணுவேன்,

மேற்கண்ட இந்த வசனத்தின் இந்த பகுதியை இறுதி வேதமாகிய அருள்மறை குர்ஆனுடைய கீழ்கண்ட வசனம் உண்மைப் படுத்துகிறது

மேலும், நாம் மூஸாவுக்கு நிச்சயமாக வேதத்தைக் கொடுத்தோம். அவருக்குப்பின் தொடர்ச்சியாக (இறை) தூதர்களை அனுப்பினோம்; இன்னும், மர்யமின் குமாரர் ஈஸாவுக்குத் தெளிவான அத்தாட்சிகளைக் ரூஹுல் குதுஸி (என்னும் பரிசுத்த ஆத்மாவைக்) கொண்டு அவருக்கு வலுவூட்டினோம்; உங்கள் மனம் விரும்பாததை (நம்) தூதர் உங்களிடம் கொண்டு வரும்போதெல்லாம் நீங்கள் கர்வம் கொண்டு (புறக்கணித்து) வந்தீர்களல்லவா? சிலரை நீங்கள் பொய்ப்பித்தீர்கள்; சிலரை கொன்றீர்கள். (அல்குர்ஆன் 2:87)

மேற்கண்ட இறைவசனத்தில் இயேசு என்ற ஈஸா நபியை மர்யமின் குமாரர் அதாவது மரியாளின் மகன் என்று பிரகடனப்படுத்துவதுடன் அந்த இயேசு என்ற இறைத்தூதரை ரூஹுல் குதுஸி என்னும் பரிசுத்த ஆத்மாவைச் கொண்டு வலுவூட்டியதாக பிரகடனப்படத்துகிறான்! (சுப்ஹானல்லாஹ் அல்லாஹ் தூயவன்)

இயேசு (எ) ஈஸா நபியின் மீது பரிசுத்த ஆத்மா

பைபிள் மத்தேயு 12:18

என் ஆவியை அவர்மேல் அமரப்பண்ணுவேன்,

அல்குர்ஆன் 2:87

மர்யமின் குமாரர் ஈஸாவுக்குத் தெளிவான அத்தாட்சிகளைக் ரூஹுல் குதுஸி (என்னும் பரிசுத்த ஆத்மாவைக்) கொண்டு அவருக்கு வலுவூட்டினோம்;

சுப்ஹானல்லாஹ்! சுப்ஹானல்லாஹ்!இயேசு இறைத்தூதர்தான் என்பதற்கு இதைவிட என்ன ஆதாரம் உங்களுக்கு வேண்டும் என் கிருஸ்தவ தோழர்களே!

இயேசு நியாயத்தை அறிவிப்பார்!

அவர் புறஜாதியாருக்கு நியாயத்தை அறிவிப்பார்

இங்கு புறஜாதியர் என்று கூறப்பட்டுள்ளது அதாவது இஸ்லாத்தை அறிந்திராத அல்லது ஏற்கத்தயங்குகிற பிற சமுதாய மக்களுக்கு இயேசு என்ற தீர்க்கதரிசி இஸ்லாம் என்னும் நேர்வழி பற்றிய நியாயத்தை அறிவிப்பார் என்று கூறப்பட்டுள்ளது அதாவது ஒருவர் இறைத்தூதராக இருந்தால் தான் அவர் அறிவிப்பு செய்ய இயலும் இதைத்தான் இந்த வசனத்தின் இந்த பகுதி விளக்குகிறது! இதை அல்குர்ஆனும் மெய்ப்படுத்துகிறது இதோ ஆதாரம்

இன்னும், ஈஸா தெளிவான அத்தாட்சிகளுடன் வந்தபோது: “மெய்யாகவே நான் உங்களுக்கு ஞானத்தைக் கொண்டு வந்திருக்கிறேன்; நீங்கள் கருத்து வேற்றுமையுடன் இருக்கும் சிலவற்றை உங்களுக்கு விளக்கிக் கூறுவேன் – ஆகவே நீங்கள் அல்லாஹ்விடம் பயபக்தியுடன் இருங்கள்; எனக்கும் கீழ்படியுங்கள்” என்று கூறினார். (அல்குர்ஆன் 43:63)

அல்லாஹு அக்பர்! (அல்லாஹ் மிகப்பெரியவன்) அதனால்தான் இவ்வாறு அழகாக வர்ணிக்கிறான்!

இயேசு (எ) ஈஸா நபியின் நேர்வழியை அறிவிப்பார்

பைபிள் மத்தேயு 12:18

அவர் புறஜாதியாருக்கு நியாயத்தை அறிவிப்பார்

அல்குர்ஆன் 43:63

இன்னும், ஈஸா தெளிவான அத்தாட்சிகளுடன் வந்தபோது: “மெய்யாகவே நான் உங்களுக்கு ஞானத்தைக் கொண்டு வந்திருக்கிறேன்

சுப்ஹானல்லாஹ்! சுப்ஹானல்லாஹ்!இயேசு இறைத்தூதர்தான் என்பதற்கு இதைவிட என்ன ஆதாரம் உங்களுக்கு வேண்டும் என் கிருஸ்தவ தோழர்களே!

இதோ இயேசு நபியின் இறைத்தூது

மேலும், மர்யமின் குமாரர் ஈஸா: “இஸ்ராயீல் மக்களே! எனக்கு முன்னுள்ள தவ்ராத்தை மெய்ப்பிப்பவனாகவும்; எனக்குப் பின்னர் வரவிருக்கும் “அஹமது” என்னும் பெயருடைய தூதரைப் பற்றி நன்மாராயம் கூறுபவனாகவும் இருக்கும் நிலையில் அல்லாஹ்வின் தூதனாக உங்களிடம் வந்துள்ளேன்” என்று கூறிய வேளையை (நபியே! நீர் நினைவு கூர்வீராக!) எனினும், அவர்களிடம் தெளிவான அத்தாட்சிகளை அவர் கொண்டு வந்த போது, அவர்கள் “இது தெளிவான சூனியமாகும்” என்று கூறினார்கள். (அல்குர்ஆன் 61:6)

முடிவுரை

அன்பிற்கினிய என் கிருஸ்தவ சகோதர, சகோதரிகளே இதோ இதுநாள்வரை நீங்கள் இயேசு என்ற தீர்க்கதரிசியை தேவனுடைய குமாரன் என்று கூறிவந்தீர்கள் ஆனால் உங்கள் வாய்களாலேயே அதாவது உங்கள் பைபிள் வசனத்தினாலேயே உங்களுடைய தேவகுமாரன் என்ற கொள்கையை சேனைகளின் கர்த்தரும், தேவனுமாகிய அல்லாஹ் எவ்வாறு சுக்குநூறாக்கி தகர்த் தெறிந்தான் என்பதை உணர்ந்துக் கொண்டீர்களா?

கண்ணியத்திற்குரிய என் கிருஸ்தவ சகோதர, சகோதரிகளே மத போதகர்களே, பாதிரியார்களே, கண்ணியஸ்தரிகளே மற்றும் கிருஸ்தவ பொது ஜனங்களே, குழந்தைகளே, பெரியர்களே,  மரணப்படுக்கையில் சிக்கித்தவிக்கும் கிழவர்களே, மூதாட்டிகளே இனியாவது இயேசு என்ற தீர்க்கதரிசியின் மார்க்கமான இஸ்லாத்தை உங்கள் மார்க்கமாக தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்! உங்களை நாம் கட்டாயப்படுத்தவில்லை மாறாக கனிவாக கேட்டுக் கொள்கிறோம். நீங்கள் இஸ்லாத்தை ஏற்பதும் நிராகரிப்பதும் உங்களுக்காகவேதானே தவிர அதில் எங்களுக்கு எந்த ஆதாயமும் இல்லை!

எங்கள் கூலி எங்கள் நபிமார்களில் ஒருவரான இயேசு என்னும் ஈஸா (அலை) அவர்களின் இறைவனாகிய அல்லாஹ்விடம் மட்டும்தான் உள்ளது அவன் நாடினால் உங்களிடம் இந்த கொள்கையை எத்திவைத்தமைக்காக எங்களுக்கு சுவனத்தை கூட கொடுப்பான்!

 

எனவே இதன்மூலம் குர்ஆன் கூறும்  உண்மையை நீங்கள் உணர்ந்தீர்கள், நாளையதினம் என்ன நடக்கும் என்பது யாருக்கும் தெரியாது எனவே இன்றே ஈஸா நபியும் அவரைத் தொடர்ந்து வந்த இறுதி நபியான முஹம்மது (ஸல்) அவர்களும் காட்டித்தந்த இஸ்லாத்தில் அடியெடுத்து வையுங்கள்!

இந்த உண்மை உங்களுக்க கசப்பாகத்தான் இருக்கும் எனவே இதோ சேனைகளின் கர்த்தராகிய அல்லாஹ்விடம் கீழ்க் கண்டவாறு ஒருமுறையாவது பிரார்த்தித்துப் பாருங்கள் இறைவன் நாடினால் கசப்பும் இனிக்க ஆரம்பித்துவிடும்!

சேனைகளின் கர்த்தாவே இஸ்லாம் என்னும் மார்க்கம் இயேசுவின் மார்க்கமாக இருந்தால் நான் இஸ்லாத்தில் நுழைய விருப்பப்படுகிறேன் இயேசுவின் மீது கருணை பொழிந்தை போன்று என் மீதும் கருணை பொழிந்து என் பாவங்களை மன்னித்து என்னையும் மறுமையில் வெற்றிபெறச் செய்வாயாக என்னை முஸ்லிம்களில் ஒருவனாக ஆக்கியருள்புரிவாயாக! (ஆமீன்)

இதோ இயேசுவின் கட்டளை இதற்கு உங்களில் கீழ்படிபவர் யார்?

என்னோடே இராதவன் எனக்கு விரோதியாயிருக்கிறான்; என்னோடே சேர்க்காதவன் சிதறடிக்கிறான். (மத்தேயு அதிகாரம் 12:30)

இயேசு என்னும் ஈஸா நபி ஒரு முஸ்லிம் எனவே அவரோடு இருக்காதவன் இயேசு எனும் ஈஸா நபிக்கு விரோதியாவான் என்பதை அறிவித்து இத்துடன் உங்களுக்கு அழகிய அழைப்பும் விடுக்கிறோம்!

இன்னும் இஸ்லாம் அல்லாத (வேறு) மார்க்கத்தை எவரேனும் விரும்பினால் (அது) ஒருபோதும் அவரிடமிருந்து ஒப்புக் கொள்ளப்பட மாட்டாது; மேலும் அ(த்தகைய)வர் மறுமை நாளில் நஷ்டமடைந்தோரில் தான் இருப்பார். (அல்குர்ஆன் 3:85)

 

(முஃமின்களே!)“நாங்கள் அல்லாஹ்வையும், எங்களுக்கு இறக்கப்பட்ட(வேதத்)தையும் இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூப் இன்னும் அவர் சந்ததியினருக்கு இறக்கப்பட்டதையும்; மூஸாவுக்கும், ஈஸாவுக்கும் கொடுக்கப்பட்டதையும் இன்னும் மற்ற நபிமார்களுக்கும் அவர்களின் இறைவனிடமிருந்து கொடுக்கப்பட்டதையும் நம்புகிறோம்; அவர்களில் நின்றும் ஒருவருக்கிடையேயும் நாங்கள் வேறுபாடு காட்ட மாட்டோம்; இன்னும் நாங்கள் அவனுக்கே முற்றிலும் வழிபடுகிறோம்” என்று கூறுவீர்களாக. (அல்குர்ஆன் 2:136)