கேள்வி பதில் (ஏசு)

கேள்வி

இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும். (1 யோவான் 1:7) என்று கிருத்தவர்கள் கூறுகிறார்களே அப்படியானால் ஏசு பாவங்களை மன்னிப்பாரா? விளக்கவும்!

தேவனுடைய விசுவாசியின் பதில்கள்

பதில்

சகோதரர்களே ஏசு கிருஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி நம்மை சுத்திகரிக்கும் என்று கூறுகிறீர்களே அப்படியானல் ஏசு என்ன பாவங்களை சுத்திகரிக்கும் ஆலையை நடத்துகிறாரா?

 

பாவம் செய்கிறவர்கள் எப்படிப்பட்டவர்கள்?

பாவஞ்செய்கிற எவனும் நியாயப்பிரமாணத்தை மீறுகிறான்; நியாயப்பிரமாணத்தை மீறுகிறதே பாவம். (I யோவான் 3:4)

மேற்கண்ட பைபிள் வசனத்தில் பாவம் செய்கிறவன் நியாயப் பிரமாணத்தை மீறுகிறான் என்று பைபிள் கூறுகிறது! அப்படியானால் இறைவன் வகுத்த நியாயப் பிரமாணத்தை மீறுகிறவன் அநியாயம் செய்கிறான் அவன் பாவிதானே! இறைவன் வகுதத்த நீதியை மீறும் பாவிகளை ஏசு எவ்வாறு மன்னிப்பார்? அப்படி ஏசு மன்னிப்பார் என்று கூறினால் அது ஏசு தேவனுக்கு துரோகம் இழைக்கிறார் என்று அர்த்தமாகிறது! அநியாயம் இழைத்தவனுடைய பாவத்தை ஏசு எவ்வாறு மன்னிப்பார்? சிந்திக்கமாட்டீர்களா?

உதாரணமாக! ஒருவன் ஒரு பெண்ணை மானபங்கம் செய்து விடுகிறான் இது மனித உரிமை மீறலாகும் இதற்கு இந்திய தண்டனை சட்டத்தின் படி தகுந்த சிறை தண்டனையை வழங்க நீதி வழிவகுக்கிறது. இதை உலக நாடுகள் அங்கீகரிக்கின்றது இஸ்லாமும் இப்படிப்பட்ட பாவச் செயல்களை வண்மையாக கண்டிப்பதோடு நின்றவிடாமல் அதற்கு கடுமயான தண்டனையை வழங்குகிறது! ஆனால் ஏசு மட்டும் இந்த பாவங்களை எவ்வாறு மன்னிப்பார்!

 

பாவிகளின் இதயம் எப்படிப்பட்டது

நம்முடைய இருதயமே நம்மைக் குற்றவாளிகளாகத் தீர்க்குமானால், தேவன் நம்முடைய இருதயத்திலும் பெரியவராயிருந்து சகலத்தையும் அறிந்திருக்கிறார். (I யோவான் 3:20)

ஒரு மனிதன் பாவம் செய்துவிட்டால் அவனுடைய இருதயமே அவனை பாவி என்று புலம்பவைக்கிறது என்று பைபிள் கூறுகிறது அப்படியானல் ஏசு எவ்வாறு உங்கள் பாவக்கறைகளை போக்குவார்?

ஒருவன் விபச்சாரம் செய்துவிட்டு தேவனிடம் தேவகுமாரனாகிய ஏசுவின் நாமத்தால் என் பாவத்தை மன்னித்துவிடு என்று கூறினால் தேவன் மன்னித்துவிடுவானாம் அப்படியானல் ஆதிபிதா ஆதாம் மற்றும் ஏவாள் செய்த பாவங்களுக்காக ஏன் தேவன் அவர்களை தண்டித்தார்? சிந்திக்கமாட்டீர்களா? இதோ ஆதாரம் பாருங்கள்!

பின்பு அவர் ஆதாமை நோக்கி: நீ உன் மனைவியின் வார்த்தைக்குச் செவிகொடுத்து, புசிக்கவேண்டாம் என்று நான் உனக்கு விலக்கின விருட்சத்தின் கனியைப் புசித்தபடியினாலே, பூமி உன் நிமித்தம் சபிக்கப்பட்டிருக்கும்; நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் வருத்தத்தோடே அதின் பலனைப் புசிப்பாய். (ஆதியாகமம் அதிகாரம் 3: 17)

ஆதாம் செய்த பாவத்தை தேவன் மன்னித்தான் ஆனால் அவரை தண்டித்தான்! ஒருவேளை ஏசு தேவகுமாரனாக இருந்து பாவங்களை மன்னிப்பவராக இருந்திருந்தால் அவரை தேவன் ஆதாமுக்கு முன்னர் படைத்திருக்க வேண்டும் பின்னர் மனிதனாக பிறந்து முதல் முதலில் பாவம் செய்த ஆதாம் மற்றும் அவரது துணைவியான ஏவாளையும் என் மகன் ஏசுவின் நாமத்தினால் மன்னிப்பு கேளுங்கள் அவர் உங்கள் பாவங்களை கழுவுவார் என்று தேவன் கூறியிருக்க வேண்டும் ஆனால் தேவனுக்கு மகனோ மனைவியோ இல்லாத போது தேவனுக்கு குமாரன் எப்படி வந்துவிடுவார்? தேவனுக்கு குமாரனுமில்லை, ஏசு தேவகுமாரனுமில்லை, ஏசு தேவனுடைய அதிகாரத்தில் கை வைப்பதுமில்லை அவர் நம்மைப் போன்று ஒரு மனிதர் மேலும் தேவனுடைய தீர்க்கதரிசிகளில் ஒருவர்! ஏசு பாவங்களை மன்னிக்கமாட்டார்! நபி ஏசு என்ன பாவங்களை சுத்திகரிக்கும் பாவச் சுத்திகரிப்பு ஆலையை நடத்துகிறாரா? உங்கள் பாவங்களை மன்னிப்பதற்கு!

சரி ஏசு பாவங்களை மன்னிப்பதாக கூறினாரா?

இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும் என்று பாவிகள் கூறுகிறார்கள் (பாவிகள் என்று நாம் கூறுவது கிருத்தவர்களைத்தான் ஆம் இவர்கள்தான் ஏசுவின் மீது பொய்யை இட்டுக்கட்டிய பாவிகள்) ஆனால் இந்த பாவிகள் கீழ்கண்ட ஏசுவின் வார்த்தைகளை உணராதது ஏன்?

இயேசு அதை கேட்டு: பிணியாளிகளுக்கு வைத்தியன் வேண்டியதேயல்லாமல் சுகமுள்ளவர்களுக்கு வேண்டியதில்லை; நீதிமான்களையல்ல, பாவிகளையே மனந்திரும்புகிறதற்கு அழைக்கவந்தேன் என்றார். (மாற்கு 2:17)

இங்கு ஏசு பாவிகளை மனந்திரும்புகிறதற்கு அழைக்க வந்தேன் என்கிறார் ஆனால் கிருத்தவர்களோ ஏசு பாவங்களை மன்னிக்க வந்தார் என்று பொய்ப்பிரச்சாரம் செய்கிறார்கள் இது ஏசுவுக்கு இவர்கள் செய்யும் துரோகமில்லையா?

எனவே ஏசு என்ற தீர்க்கதரிசி தாம் பாவிகளை மனந்திருந்த அழைக்க வந்ததாக கூறிவிட்டமையால் அவர் தன் புறத்திலிருந்து தாம் பாவங்களை மன்னிப்பதில்லை என்ற உண்மையை தெளிவாக உரைத்து விட்டார்!

எனவே கீழ்கண்ட பைபிள் வசனம் பொய் என்பதற்கு ஏசுவின் வார்த்தைகளே போதுமானதாகும்!

இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும். (1 யோவான் 1:7)

கீழ்கண்ட பைபிள் வசனம் கூறுவதை செவிதாழ்த்தி கேளுங்கள்!

இயேசு அதை கேட்டு: பிணியாளிகளுக்கு வைத்தியன் வேண்டியதேயல்லாமல் சுகமுள்ளவர்களுக்கு வேண்டியதில்லை; நீதிமான்களையல்ல, பாவிகளையே மனந்திரும்புகிறதற்கு அழைக்கவந்தேன் என்றார். (மாற்கு 2:17)

முடிவுரை

இறைவன் வகுதத்த நீதியை மீறும் பாவிகளை ஏசு எவ்வாறு மன்னிப்பார்? அப்படி ஏசு மன்னிப்பார் என்று கூறினால் அது ஏசு தேவனுக்கு துரோகம் இழைக்கிறார் என்று அர்த்தமாகிறது! ஆனால் ஏசு பாவமற்றவராக இருக்கிறபடியால் அவர் தேவனுக்கு துரோகமிழைக்கமாட்டார்! உங்கள் பாவங்களை கழுவ அவர் ஏன் தேவனிடத்தில் பாவியாவார்? எனவே தேவனிடத்தில் ஏசுவை பாவியாக ஆக்கிவிடாதீர்கள் அப்படி ஆக்கினாலும் அதனால் அவருக்கு எதுவும் நடக்காது ஏனெனில் அவர் பாவிகளின் பாவங்களை மன்னிப்பதாக கூறவில்லை

சிந்தியுங்கள் ஏசு யாருடைய பாவங்களையும் மன்னிக்கமாட்டார் எனவே ஏசு என்ற தீர்க்கதரிசியை இழிவுபடுத்தி பேசாதீர்கள்! மாறாக ஏசுவை பின்பற்றி சத்திய சன்மார்க்கத்தில் நுழைந்துவிடுங்கள்!

============================================

 

கிறிஸ்துவே எங்கள் பாவங்களை சுமந்து தீர்த்த தேவ ஆட்டுக்குட்டி – இவ்வாறு கூறலாமா?

பதில்

தேவனுடைய விசுவாசியின் பதில்கள்

ஏசுவை பின்பற்றாத கிருத்தவ சகோதர, சகோதரிகளே! இந்த கேள்வியில் எத்தனை பாவங்கள் அடங்கியுள்ளது என்பதை பார்த்தீரா? சற்று கீழே உள்ளதை கவனமாக படியுங்கள்!

  • முதலில் ஏசு என்ற தீர்க்கதரிசியை தேவகுமாரன் என்று அபாண்டமாக பொய்யை இட்டுக்கட்டி உங்கள் ஜனங்களை வழிகெடுத்தீர்கள்! இது பாவமில்லையா? ஏசு தன்னை தேவனுடைய குமாரன் என்று கூறினாரா?
  • இரண்டாவதாக ஏசு எல்லோருடைய பாவங்களையும் மன்னிப்பவர் என்று உளறுகிறீர்கள்! ஏசு யாருடைய பாவத்தையாவது மன்னிப்பதாக கூறினாரா? அல்லது தேவன் பாவங்களை மன்னிக்கும் அதிகாரத்தை ஏசுவுக்கு வழங்கினானா?
  • இறுதியாக கிறிஸ்துவே  எங்கள் பாவங்களை சுமந்து தீர்த்த தேவ ஆட்டுக்குட்டி என்று கூறி ஏசுவை பழிகடாவாக ஆக்கிவிட்டீர்கள்!

கிறிஸ்துவே எங்கள் பாவங்களை சுமந்து தீர்த்த தேவ ஆட்டுக்குட்டி என்ற வார்த்தையை உண்மை என்று நம்பி மோசம் போன எத்தனையோ பாதரியார்கள் பாவம் என்பது மன்னிக்கப்படும் என்ற தைரியத்தில் பாலியல் தொல்லைகள், குழந்தை கடத்தல், ஓரினச் சேர்க்கை, கற்பழிப்பு, மோசடி ஆகிய குற்றங்களில் ஈடுபடுகின்றனர்.

சிந்தித்துப்பாருங்கள் சகோதர சகோதரிகளே நீங்கள் பாவத்தை செய்வதுவிட்டு தேவனுடைய தண்டனையிலிருந்து தப்பித்து விடுவதற்காக ஏசுவை பாவத்தின் கேடயமாக பயன்படுத்து கிறீர்களே இது நியாயமா? எவனோ ஒருவன் திருடுகிறான், விபச்சாரம் பண்ணுகிறான் இந்த பாவங்களை ஏசு தன் மீது சுமந்துக் கொள்வாரா? அடப்பாவிகளே! இப்படி ஒரு வழி இருந்திருந்தால் நாளை மறுமை நாளில் தேவனுடைய சந்நிதானத்தில் ஏசு உலக மகா திருடனாகவும், உலக மகா விபச்சாரகனாகவும்தானே நிற்பார் அப்போ பாவம் செய்த நீ்ஙகள் எல்லாம் சுகமாக சுவர்கம் போகனும் ஏசு நரக படுகுழியில் விழனுமா? பாவிகளே இப்படிப்பட்ட பாவத்தை நினைத்துப் பார்க்க கூட கேவலமாக உள்ளதே இப்படித்தான் ஏசுவை இழிவுபடுத்துவீர்களா?

முதலில் தேவனுடைய தூதர்களில் ஒருவரான ஏசுவை தேவ குமாரன் என்று கூறிய நீ்ங்களே இப்போது ஏசுவை தேவ ஆட்டுக்குட்டி என்று கூறுகிறீர்கள்.

ஏசுவை தேவகுமாரனாக மாற்றி, பாவங்களை சுமந்த தேவ ஆட்டுக் குட்டியாக மாற்றி இறுதியாக பலிகடாவாக ஆக்கிவிட்டீர்களே பாவிகளே ஒருவேளை ஏசு உங்களை மன்னித்தாலும் ஏசுவை பாவி என்று இனம்காட்டிய உங்களை தேவன் எப்படியடா மன்னிப்பார்?

இதோ ஏசு பாவங்களை மன்னிப்பதற்கு பதிலாக பாவிகளை திருத்த வந்தார் என்றுதான் பைபிள் கூறுகிறது!

இயேசு அதை கேட்டு: பிணியாளிகளுக்கு வைத்தியன் வேண்டியதேயல்லாமல் சுகமுள்ளவர்களுக்கு வேண்டியதில்லை; நீதிமான்களையல்ல, பாவிகளையே மனந்திரும்புகிறதற்கு அழைக்கவந்தேன் என்றார். (மாற்கு 2:17)

ஏசுவே தன் நிலைமைய தெளிவாக கூறியிருக்கிறபடியால் கிறிஸ்துவே எங்கள் பாவங்களை சுமந்து தீர்த்த தேவ ஆட்டுக்குட்டி என்ற வார்த்தை பொய் என்பது ஏசுவின் வார்த்தைகளாலேயே நிறுபணமாகிவிட்டது!  இனி இந்த வார்த்தையை யாராவது பயன்படுத்தினால் அவர் ஏசுவை இகழ்தவராவார் என்பதை தெள்ளத் தெளிவாக  கூறிவிட்டோம்! இதற்கு தேவனாகிய அல்லாஹ் சாட்சி!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s